இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் ஏஜென்சியான மாஷவ் (MASHAV) உடன் இணைந்து, இந்த புதிய மையத்தை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நிறுவ உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நீர்வள மேலாண்மை மற்றும் நீர் தொழில்நுட்பங்களில் 'இந்தியா - இஸ்ரேல் நீர் தொழில்நுட்ப மையம்' (சி.ஓ.டபிள்யூ.டி) நிறுவ,சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி), இஸ்ரேல் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோஷி, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோட்டி மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலோன் ஆகியோர் மே 9-ம் தேதி புது டெல்லியில் ஒரு விருப்பக் கடிதத்தில் கையெழுத்திட்டனர். இந்தியா மற்றும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் எலி கோஹன் ஆகியோர் முன்னிலையில், சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் டி.பிரதீப் முன்னிலையில் இந்த கடிதம் இணையம் வழியாக கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் ஏஜென்சியான மாஷவ் (MASHAV) உடன் இணைந்து, இந்த புதிய மையத்தை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நிறுவ உள்ளது.
இந்த மையத்தின் முக்கிய நோக்கம், இந்தியத் தேவைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட சூழலில் இஸ்ரேலின் சிறந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதும், இந்திய நீர்த் துறைக்கான நிலையான மேலாண்மை தீர்வுகளில் வேலை செய்வதும் ஆகும்.
இந்த மையத்தின் மூலம் இரு நாட்டு நிபுணர்களும் தொழில்நுட்பம், அறிவியல் தகவல்கள், இலக்கியம் ஆகியவற்றை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதோடு, குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க இருநாட்டு நிபுணர்களுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை நடத்துவார்கள். இந்த தலையீட்டின் புதிய பகுதிகளை உருவாக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"