Advertisment

ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்’ கணித படிப்பு; இலவசமாக படிக்கலாம்!

'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' கணித பாடத்தை தொடங்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ்; இந்த படிப்புகள் இலவசம் மற்றும் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iit madras

IIT Madras

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), மெட்ராஸ் 3 மற்றும் 4 ஆம் நிலைகளில் 'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' கணித பாடத்தை தொடங்குகிறது. இந்த படிப்புகள் இலவசம் மற்றும் ஐ.ஐ.டி-எம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் கீழ் மட்டுமே ஆன்லைன் பயன்முறையில் வழங்கப்படுகின்றன.

Advertisment

நிலை 3 மற்றும் நிலை 4 க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 7, 2023. இணையதளத்தில் பதிவு செய்ய http://pravartak.org.in/oobtregistration_math என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்.

இதையும் படியுங்கள்: 5ஜி சார்ந்த படிப்புகள்; தமிழக பொறியியல் கல்லூரிகளில் விரைவில் அறிமுகம்

இந்த படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு மையங்களில் இறுதித் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தப் படிப்பு உள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரவர்தக் நிறுவனத்தால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

நிலை 1 மற்றும் நிலை 2 படிப்புகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, அதில் மொத்தம் 1.42 லட்சம் மாணவர்கள் படித்தனர்.

ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ பாடத்தின் 1 மற்றும் 2 நிலைகள் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த படிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பாடநெறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். தொழில் முனைவோராக விரும்புபவர்கள் புதுமைகளுக்கு வித்தியாசமாக சிந்திப்பது மிகவும் முக்கியமானது. இளம் மனதை வித்தியாசமாக சிந்திக்கப் பயிற்றுவிப்பது, நீண்டகாலத்தில் நமது தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான இளைஞர்களை உருவாக்கும்,” என்று கூறினார்.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மெட்ராஸ் (IITM) 1959 இல் இந்திய அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக நிறுவப்பட்டது. ஐ.ஐ.டி மெட்ராஸ் 16 கல்வித் துறைகளைக் கொண்டுள்ளது மற்றும் பி.டெக், எம்.பி.ஏ, எம்.டெக் மற்றும் பி.எச்.டி ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment