இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸ் (IIT) இந்தியா முழுவதும் பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி படிப்புகளை வழங்க, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் டிஜிட்டல் முறையில் இயங்கும் கற்றல் முயற்சியான L&T EduTech உடன் இணைந்து செயல்பட உள்ளது.
மாணவர்களை ‘தொழில்துறைக்கு தயார்படுத்துவதற்கு’ தேவைப்படும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி தொடங்கப்படுகிறது. இது தொழில்துறை முழுவதும் உள்ள தொழில் வல்லுநர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தொழில் முன்னேற்றத்தை அடையவும் தனிப்பயனாக்கப்பட்ட படிப்புகளை வழங்கும். பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஐ.ஐ.டி மெட்ராஸின் பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டுவரும் அதே வேளையில், L&T EduTech தொழில் நிபுணத்துவத்தை வழங்கும்.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ மார்க் குறைவா? இன்ஜினியரிங் படிக்க இன்னும் நிறைய வாய்ப்பு இருக்கு!
இந்தப் பயிற்சி படிப்புகள் ஒவ்வொன்றும் பொறியியல் பயன்பாடுகளால் ஆதரிக்கப்படும் கருத்தியல் கற்றலை வழங்கும். அனைத்து பங்கேற்பாளர்களும் பொறியியல் நடைமுறையில் இருந்து பெறப்பட்ட தொழில் தொடர்பான அறிவுடன் பொறியியலின் அடிப்படைகளை வெளிப்படுத்துவார்கள்.
நிபுணர்கள் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களை அடைய இலக்கு வைத்துள்ளனர். இந்த படிப்புகள் கலப்பு முறையில் வழங்கப்படுகின்றன.
பயிற்சி படிப்பு பற்றிய விவரங்கள் மே 2023 இறுதிக்குள் அந்தந்த இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் விரைவில் அறிவிக்கப்படும்.
“ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் எல்&டி குழுமம் இணைந்து பல்வேறு துறைகளில் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் திறன் திட்டங்களை உருவாக்கி வருகின்றன. எங்களின் முதன்மைத் திட்டமான ‘பி.ஐ.எஸ்’ (பில்ட் இந்தியா ஸ்காலர்ஷிப்) ஒரு பெரிய வெற்றி. கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள திறன் இடைவெளியை சான்றிதழ் படிப்புகள் மூலம் நிவர்த்தி செய்ய இந்த உறவில் இப்போது ஒரு படி முன்னேறி வருகிறோம். இந்த படிப்புகள் தொழில்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர்களால் கோட்பாடு மற்றும் நடைமுறை அமர்வுகளுக்கு சமமான முக்கியத்துவத்துடன் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொழில் வல்லுநர்கள் மற்றும் கோர் இன்ஜினியரிங் மற்றும் IT/ITES ஆகியவற்றில் புதிய பட்டதாரிகளுக்காக அவர்களின் மேம்பாடு, பன்முகத் திறன் மற்றும் மறுதிறன் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கூட்டாண்மைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil