/indian-express-tamil/media/media_files/fYWbk1t3SH13JtkamaKR.jpg)
இந்த கூட்டாண்மை ஐ.ஐ.டி ரோபாரில் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கும் உதவும். (படம்: ஐ.ஐ.டி சென்னை)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரோபார் ஆகியவை கூட்டாண்மையில் இணைந்துள்ளன. இது ஐ.ஐ.டி சென்னையில் பி.எஸ் பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) படிக்கும் மாணவர்கள் ஐ.ஐ.டி ரோபாரில் எம்.எஸ் படிப்புக்கான சேர்க்கைப் பாதையுடன் வளாகப் படிப்புகளை படிக்க உதவும்.
ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras partners with IIT Ropar for IITM BS degree students
இந்த கூட்டாண்மை ஐ.ஐ.டி ரோபாரில் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கும் உதவும். இந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஆகஸ்ட் 28) கையெழுத்தானது.
இந்த ஒத்துழைப்பு என்ன வழங்குகிறது?
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் (டேட்டா சயின்ஸ்) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கேட் (GATE) தேர்வு இல்லாமல் ஐ.ஐ.டி ரோபாரில் இல் எம்.எஸ் படிப்பில் நேரடி சேர்க்கை பெற உதவும்.
— ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐ.ஐ.டி ரோபாரில் ஒரு வருடம் வரை செலவிடலாம்
— ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் கோடையில் ஐ.ஐ.டி ரோபார் வழங்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
— ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐ.ஐ.டி ரோபார் ஆசிரியர்களின் கீழ் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை தொடரலாம்
— இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.ஐ.டி ரோபார் இளநிலை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் திட்டத்தில் வழங்கப்படும் தரவு அறிவியல் மற்றும் நிரலாக்க படிப்புகளை படிக்க உதவுகிறது.
-கூடுதல் மாணவர் பரிமாற்ற திட்டங்கள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் பிற கூட்டு முயற்சிகளும் ஆதரிக்கப்படும்.
ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் சென்னை கணித நிறுவனம் ஏற்கனவே ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் (டேட்டா சயின்ஸ்) பட்டப்படிப்பின் தகுதியுள்ள மாணவர்களுக்காக தங்கள் வளாகப் படிப்புகளைத் திறந்துள்ளன. ஐ.ஐ.டி சென்னை ஜூன் 2020 இல் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் அதன் 4 ஆண்டு பி.எஸ் படிப்பை அறிமுகப்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.