scorecardresearch

ஐ.ஐ.டி மெட்ராஸ் கேம்பஸ் இண்டர்வியூ: 25 மாணவர்களுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் பேக்கேஜ்

ஐ.ஐ.டி மெட்ராஸ் வேலை வாய்ப்புகள் 2022; ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்ற 25 மாணவர்கள்

ஐ.ஐ.டி மெட்ராஸ் கேம்பஸ் இண்டர்வியூ: 25 மாணவர்களுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் பேக்கேஜ்

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT-Madras) 2022-23 கல்வியாண்டுக்கான வேலை வாய்ப்புகளை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு மொத்தம் 25 மாணவர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான பேக்கேஜ்களை பெற்றுள்ளனர். வேலை வாய்ப்புகளின் முதல் நாளில் அமர்வு 1.1 முடிவில் மொத்தம் 445 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.

சென்னை ஐ.ஐ.டி ஆனது இந்த ஆண்டு அதிக வேலை வாய்ப்பு ஆஃபர்களை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டு 407 என்ற எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகம்.

இதையும் படியுங்கள்: நீட் சிறப்பு மருத்துவ படிப்பு; 50% இடங்களை பணியில் உள்ளவர்களுக்கு வழங்குக; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த ஆண்டு, ஐ.ஐ.டி-மெட்ராஸ் மாணவர்களுக்கு பெரும்பாலான சலுகைகளை வழங்கிய சிறந்த நிறுவனங்கள்: டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (14 ஆஃபர்கள்), பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (10 ஆஃபர்கள்) மற்றும் Qualcomm (8 ஆஃபர்கள்), JP Morgan Chase & Co (9 ஆஃபர்கள்), Proctor & Gamble (7 ஆஃபர்கள்), Morgan Stanley (6 ஆஃபர்கள்), Graviton (6 ஆஃபர்கள்), McKinsey & Company (5 ஆஃபர்கள்) மற்றும் Cohesity (5 ஆஃபர்கள்).

இதற்கிடையில், ஐ.ஐ.டி குவஹாத்தியும் வெள்ளிக்கிழமை தனது வேலை வாய்ப்பு முகாமை தொடங்கியது, இதில் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர், டேட்டா சயின்ஸ், குவாண்ட், கோர் இன்ஜினியர், யுஎக்ஸ் டிசைனர், வி.எல்.எஸ்.ஐ, வாகனப் பொறியியல், ஆய்வாளர், தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் சில துறைகளுடன் பல துறைகளில் மொத்தம் 168 ஆஃபர்களை 46 நிறுவனங்கள் வழங்கியுள்ளன. ஐ.ஐ.டி குவஹாத்தியில் வேலை வாய்ப்பு வழங்கிய சில முக்கிய நிறுவனங்கள் மைக்ரோசாப்ட், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், கூகுள், உபெர், குவால்காம், சி-டாட், என்ஃபேஸ் எனர்ஜி, ஆரக்கிள், நியூட்டானிக்ஸ், தாட்ஸ்பாட் MTS-2, Squarepoint SDE/Quant, American Express, JP Morgan Chase, Bajaj, Rippling, Tibra, Cohesity, and Sprinklr Platform + Product போன்றவை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Iit madras placements 2022 25 students bag packages over rs 1 crore