சென்னை ஐ.ஐ.டி-யின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை கடந்த சில ஆண்டுகளில் சராசரி சம்பளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அல்லது சலுகைகளை அப்படி அதிகரித்துள்ளதாகக் கூற முடியாது. 5 ஆண்டு பகுப்பாய்வை இங்கே பார்க்கலாம்.
(ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு என்பது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடரின் ஒரு பகுதியாகும். அங்கு ஒரு சிறந்த பொறியியல் கல்லூரி வழங்கும் பாடத்திட்டத்தின் ஐந்தாண்டு வேலைவாய்ப்பு பதிவை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம். இது ஜே.இ.இ. ஆர்வலர்கள் தங்கள் விருப்பப்படி படிப்பைத் தேர்வுசெய்ய உதவும்.)
புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு – சென்னை ஐ.ஐ.டி ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
கடந்த சில ஆண்டுகளில், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் வளாக வேலைவாய்ப்பு டிரெண்ட் ஏற்ற இறக்கத்தைக் கண்டுள்ளது. ஆனால், சராசரி சம்பளம் குறிப்பாக கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையின் சராசரி சம்பளம் 2017-18-ல் ஆண்டுக்கு ரூ.10.4 லட்சத்திலிருந்து 2021-22 கல்வியாண்டில் ஆண்டுக்கு ரூ.18.67 லட்சமாக உயர்ந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி-யின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறைக்கான கடந்த 5 வருட வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்களைபாருஙகள்.

(கிராபிக்ஸ் – அபிஷேக் மித்ரா)
2017-18ல் 39 ஆக இருந்த ஆஃபர்களின் எண்ணிக்கையைப் பற்றி இதையே கூற முடியாது, ஆனால் 2019-20ல் 61 ஆகவும் பின்னர் 2020-21ல் 56 ஆகவும் குறைந்துள்ளது. மொத்த வேலை வாய்ப்பு சலுகைகளில் இந்த குறைவு கோவிட் தொற்றுநோய் தோன்றியதன் விளைவாக இருக்கலாம், இது தொழில்துறையில் சலுகைகள் குறைவதற்கு வழிவகுத்தது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை 2021-22 கல்வியாண்டில் 84 ஆக கடுமையாக உயர்ந்துள்ளது.
2017-18ல் 35 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2021-22ல் 67 ஆக உயர்ந்துள்ளது. இது 35ல் இருந்து 56 ஆக உயர்ந்து, அடுத்த ஆண்டுகளில் 50 மற்றும் 49 ஆகக் குறைந்து, இறுதியில் 2021-22ல் 67 ஆக உயர்ந்தது.
ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள்
சென்னை ஐ.ஐ.டி வழங்கியுள்ள தரவுகளின்படி, 2021-22-ல், வேலைவாய்ப்பு சதவீதம் 78 ஆக இருந்தது. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறைக்கான குறைந்தபட்ச சம்பளம் ஆண்டுக்கு ரூ.6.5 லட்சமாகவும், 2021-22-ல் அதிகபட்ச சம்பளம் ஆண்டுக்கு ரூ.46 லட்சமாகவும் இருந்தது.
2022-23க்கான வேலை வாய்ப்பு சீசன் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. 2022-23 வேலை வாய்ப்பு சீசனின் சிறந்த தேர்வாளர்களில் சிலர் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, குவால்காம், ஜே பி மோர்கன் சேஸ், ப்ராக்டர் & கேம்பிள், மோர்கன் ஸ்டான்லி, கிராவிடன், மெக்கின்சே & கம்பெனி மற்றும் கோஹெசிட்டி போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“