/indian-express-tamil/media/media_files/2025/10/14/iit-madras-2025-10-14-18-30-22.jpg)
ஐ.ஐ.டி மெட்ராஸின் இலவச தொழில்முனைவோர் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக புதிய திட்டங்கள் அறிமுகம்!
அடுத்த தலைமுறை இந்தியத் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், ஐ.ஐ.டி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் (IIT Madras Pravartak Technologies Foundation), போத்பிரிட்ஜ் எஜுகேஷன் (BodhBridge Education) நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்கும் பணிபுரிபவர்களுக்கும் 2 புதிய மற்றும் இலவச தொழில்முனைவோர் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போத்பிரிட்ஜ் எஜுகேஷன் நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பயிற்சித் திட்டங்களின் விவரங்கள்:
இத்திட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. இதில் நிபுணர்களுடன் நேரடி ஊடாடல் அமர்வுகள் (Live Interactive Sessions), பாடப் பொருட்கள், கேஸ் ஸ்டடிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அமர்வுகளைப் பார்க்கும் வசதியும் உண்டு. பயிற்சி மற்றும் பொருட்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
1. 'From Students to Startup' (மாணவர்களிலிருந்து ஸ்டார்ட்அப் வரை):
இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் (UG மற்றும் PG), மற்றும் பணிபுரிபவர்களுக்கு ஏற்றது. தொழில்முனைவுக்கு அறிமுகம், சிக்கலைக் கண்டறிதல், யோசனையை உறுதிப்படுத்துதல், வணிக மாதிரி உருவாக்கம், சந்தை ஆராய்ச்சி, நிதி திரட்டுதல், சந்தைப்படுத்தல் மற்றும் இணக்கத் தேவைகள் (compliance essentials).
2. 'Discover the Entrepreneur in You' (உங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவோரைக் கண்டறியுங்கள்):
7 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஏற்றது. படைப்பாற்றல், சிக்கலைத் தீர்க்கும் திறன், தலைமைப் பண்பு மற்றும் அடிப்படை வணிகத் திறன்கள் ஆகியவற்றை சுவாரஸ்யமான கேஸ் ஸ்டடிகள் மூலம் வளர்க்கும் நேரடி ஆன்லைன் திட்டம்.
பதிவு மற்றும் கால அட்டவணை:
முதல் தொகுதி துவக்கம்: நவம்பர் 1, 2025.
பதிவு செய்ய இறுதி நாள்: அக்டோபர் 28.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழக்கமான பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படும். மாணவர்கள் bodhbridge.iitmpravartak. org.in என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம். மாணவர்கள் விரும்பினால், குறைந்த கட்டணம் செலுத்திச் சான்றிதழ் தேர்வுக்குப் பதிவு செய்து, ஐ.ஐ.டி.எம் பிரவர்தக் ஃபவுண்டேஷனில் இருந்து தர அடிப்படையிலான செயல்திறன் சான்றிதழைப் பெறலாம்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்கத் துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடையே தொழில்முனைவு பற்றிய கட்டமைப்பு ரீதியான வெளிப்பாடு குறைவாக உள்ளது. இந்தப் பயிற்சித் திட்டங்கள் அந்த இடைவெளியைக் குறைக்க உதவும்.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் தலைமை அறிவு அலுவலர் பாலமுரளி சங்கர் கூறுகையில், "பள்ளி கல்லூரி மட்டத்தில் தொழில்முனைவோர் பயிற்சியை வழங்குவதன் மூலம், தன்னம்பிக்கை மிக்க, புதுமையான மற்றும் சமூகப் பொறுப்புள்ள தலைவர்களின் தலைமுறையை உருவாக்க ஐ.ஐ.டி.எம் பிரவர்தக் மற்றும் போத்பிரிட்ஜ் இலக்கு வைக்கின்றன," என்று தெரிவித்தார்.
தொழில்முனைவோர் கல்வி மாணவர்களுக்கு மீள்திறன், தன்னம்பிக்கை மற்றும் நோக்கத்தை வளர்ப்பதோடு, எதிர்காலத்தில் வணிகங்களைத் தொடங்குவதற்கும், எந்தவொரு துறையிலும் வெற்றி பெறுவதற்கும் உதவுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us