scorecardresearch

அமெரிக்க தேசிய பொறியியல் அகாடமி; சர்வதேச உறுப்பினராக ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியர் தேர்வு

2003-07 வரை இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் பி.என் சுரேஷுக்குப் பிறகு, நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் விண்வெளிப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் பேராசிரியர் ஆர்.ஐ சுஜித்

அமெரிக்க தேசிய பொறியியல் அகாடமி; சர்வதேச உறுப்பினராக ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியர் தேர்வு
பேராசிரியர் ஆர்.ஐ சுஜித் (படம்: ஐ.ஐ.டி மெட்ராஸ்)

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) பேராசிரியர் ஆர்.ஐ சுஜித், யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் (NAE) சர்வதேச உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘பொறியியல் அமைப்புகளில் உள்ள உறுதியற்ற தன்மைகளைப் புரிந்துகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இயக்கவியல் அமைப்புகள் கோட்பாட்டின் பயன்பாடுகள்’ தொடர்பாக பொறியியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சர்வதேச உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பேராசிரியர் சுஜித் தற்போது ஐ.ஐ.டி மெட்ராஸ் விண்வெளி பொறியியல் துறையில் தலைமைப் பேராசிரியராகவும், சிக்கலான அமைப்புகளில் முக்கியமான மாற்றங்களைப் படிப்பதற்கான சிறந்த மையத்தின் தலைவராகவும் உள்ளார்.

இதையும் படியுங்கள்: வெளிநாட்டு படிப்பு; இந்தியர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கும் நாடுகள் இவைதான்!

“பொறியியல் ஆராய்ச்சி, நடைமுறை அல்லது கல்வி, பொருத்தமான இடங்களில், பொறியியல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்” மற்றும் “புதிய மற்றும் வளரும் தொழில்நுட்பத் துறைகளின் முன்னோடி, பாரம்பரிய பொறியியல் துறைகளில் பெரிய முன்னேற்றங்கள், அல்லது பொறியியலில் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்குதல்/செயல்படுத்துதல் கல்வி” ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அகாடமி உறுப்பினராக்கி கௌரவிக்கிறது.

2003-07 வரை இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் பி.என் சுரேஷுக்குப் பிறகு, நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் விண்வெளிப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் பேராசிரியர் ஆர்.ஐ சுஜித் ஆவார். பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவுக்குப் பிறகு தேசிய பொறியியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியராகவும் ஆர்.ஐ சுஜித் உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Iit madras professor elected international member us national academy of engineering