இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) 2023-24 நிதியாண்டில் அதன் முன்னாள் மாணவர்கள், தொழில்துறை மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras raises record-breaking funding from alumni, industry, others
2023-24 நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் கூட்டாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.717 கோடிக்கான புதிய உறுதிமொழிகளையும் நிறுவனம் ஈர்த்துள்ளது.
ஐ.ஐ.டி மெட்ராஸின் நிறுவன முன்னேற்ற அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர் கூறுகையில், “முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்படும் நிதி, அதிநவீன ஆராய்ச்சிக்கு உதவவும், தேவைப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும், வளாகத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.
கவிராஜ் நாயர் மேலும் கூறுகையில், “இந்த முக்கியமான பகுதிகளில் முதலீடு செய்வதன் மூலம், ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி அனுபவத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், புதுமை மற்றும் சமூக மாற்றத்திற்கான ஊட்டச்சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நன்கொடை ஆதரவின் சிற்றலை விளைவு எங்கள் வளாக எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது, சமூகங்களை அடைந்து எண்ணற்ற உயிர்களைத் தொடுகிறது. எங்கள் நன்கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் சேர்ந்து, அறிவின் எல்லைகளைத் தொடர்ந்து உலகில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவோம்,” என்றும் கூறினார்.
2020-21 ஆம் ஆண்டில், ஐ.ஐ.டி-மெட்ராஸ் 101.2 கோடி ரூபாயையும், 2021-22 இல், 131 கோடி ரூபாயையும், 2022-23 இல், நிறுவனம் 231 கோடி ரூபாயையும் திரட்ட முடிந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரூ.513 கோடியானது முந்தைய 2022-23 நிதியாண்டில் திரட்டப்பட்ட தொகையை விட 135 சதவீதம் அதிகமாகும்.
தகவலின்படி, சுமார் 48 (16 முன்னாள் மாணவர்கள் மற்றும் 32 கார்ப்பரேட் பார்ட்னர்கள்) நன்கொடையாளர்கள் தலா ரூ.1 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர்.
ஐ.ஐ.டி மெட்ராஸின் முக்கிய திட்டங்கள்
- வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏ.ஐ
– விளையாட்டு சிறப்பு சேர்க்கை திட்டம்
– ஜெய்ஸ்ரீ மற்றும் வெங்கட் காற்று ஆற்றல் மையம்
– சங்கர் நீரிழிவு ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம்
- வால்மார்ட் தொழில்நுட்ப சிறப்புக்கான மையம்
- நிலையான விநியோகச் சங்கிலிகளுக்கான ஃபெடெக்ஸ் மையம்
– மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளநிலை உடற்கூறியல் ஆய்வகம்
ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகளின் அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது, இது நிதி திரட்டும் முயற்சிகளைக் கவனிக்கவும், ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பல்வேறு நெட்வொர்க்குகளுக்கு இடையே இணைப்புகளை மேம்படுத்தவும் எளிதாக்கவும் ஒரு பிரத்யேக நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“