இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி மெட்ராஸ் – IIT Madras) 2022-23 நிதியாண்டில் முன்னாள் மாணவர்கள், தொழில்துறை மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.231 கோடி நிதி திரட்டியுள்ளது. ஐ.ஐ.டி-மெட்ராஸின் கூற்றுப்படி, சமூகம் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, ஒரு நிதியாண்டில் திரட்டப்பட்ட நிதியின் அதிகபட்ச தொகை இதுவாகும்.
ஐ.ஐ.டி-மெட்ராஸ் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நிதி திரட்டல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து நிதியாண்டு 22 இல் ரூ. 131 கோடியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 76 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், ரூ.1 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 64 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் துறையில் சிறந்த 5 வேலை வாய்ப்புகள் இதோ
CSR நிதிகள் மற்றும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) மானியங்களுடன் கூடுதலாக முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டது.
இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ.96 கோடி பங்களித்துள்ளனர். அவர்களின் கவனம் செலுத்தும் பகுதிகளில் பல்வேறு சமூக தாக்கக் கருப்பொருள்கள், உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, குறிப்பிட்ட பகுதிகளில் அதிநவீன ஆராய்ச்சிக்கான தலைவர் பேராசிரியர்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
ஐ.ஐ.டி-மெட்ராஸின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்புகள் மூலம் பங்களிப்புகள் வந்தன, அவற்றில் சில தொற்றுநோய் காரணமாக முன்னர் நடக்கவில்லை.
CSR பிரிவு கடந்த ஆண்டில் மட்டும் 40 புதிய கூட்டாண்மைகளுடன் முந்தைய ஆண்டை விட 56 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நன்கொடையாளர்களின் கவனத்தை ஈர்த்த துறைகளில் ஆற்றல், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகள் மற்றும் CSR இன் கீழ் ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil