Advertisment

கேம்பஸ் இண்டர்வியூவில் அசத்திய சென்னை ஐ.ஐ.டி; சராசரி ஆண்டு சம்பளம் ரூ. 21.48 லட்சம்

ஐ.ஐ.டி சென்னையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்புகளின் போது மாணவர்கள் பெறும் சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.21.48 லட்சமாகும். அதிகபட்ச சம்பளம் $250,000

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேம்பஸ் இண்டர்வியூவில் அசத்திய சென்னை ஐ.ஐ.டி; சராசரி ஆண்டு சம்பளம் ரூ. 21.48 லட்சம்

IIT-Madras placements: Rs 21.48 lakh per annum average salary offer: கேம்பஸ் வேலை வாய்ப்புகளின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் 380 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 1,199 வேலை வாய்ப்புகள் பெறப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்) ஒரு கல்வியாண்டில் அதிக வேலை வாய்ப்புகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.

Advertisment

கூடுதலாக, மாணவர்களின் கோடைகால பயிற்சியில் இருந்து 231 முன்கூட்டிய வேலை வாய்ப்பு சலுகைகளும் பெறப்பட்டுள்ளன என்று ஐ.ஐ.டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,430 வேலை வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன. இது 2018-19 கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1,151 வேலை வாய்ப்புகளை விட அதிகமாகும்.

இதில் 14 நிறுவனங்களின் 45 சர்வதேச வேலைவாய்ப்பு சலுகைகளும் அடங்கும், ஐஐடி-சென்னையைப் பொறுத்தவரை, இது ஒரு புதிய சாதனையாகும். இவற்றில், 11 சர்வதேச வேலைவாய்ப்பு சலுகைகள் Rakuten Mobile, Inc இலிருந்து வந்தன, மற்ற சர்வதேச வேலைவாய்ப்பு சலுகைகள் Glean, Micron Technologies, Honda R&D, Cohesity, Da Vinci Derivatives, Accenture Japan, Hilabs Inc., Quantbox Research, MediaTek, Money Forward, Rubrik, Termgrid மற்றும் உபெர் ஆகியவை ஆகும்.

மேலும், 131 ஸ்டார்ட்-அப்கள் 199 ஆஃபர்களை இந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட கேம்பஸ் வேலைவாய்ப்புகளில் வழங்கியுள்ளன. இதற்கிடையில், ஐ.ஐ.டி சென்னையில் படிக்கும் அனைத்து 61 எம்.பி.ஏ மாணவர்களும் இந்த சீசனில் வேலைவாய்ப்பு பெற்றனர், இது ஐ.ஐ.டி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறைக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு சாதனையாகும்.

ஐஐடி மெட்ராஸ் வேலை வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான முதல் கட்டம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்டிருந்தாலும், இரண்டாம் கட்டம் பொதுவாக ஜனவரி இரண்டாம் பாதியில் தொடங்கி கல்வியாண்டு முடியும் வரை நீடிக்கும். ஆனால் இந்தமுறை 2021-22 ஆம் ஆண்டில், வளாக வேலைவாய்ப்புகளின் இரண்டாம் கட்டம் மே 27, 2022 வரை நடைபெற்றது.

2021-22 ஆம் ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்புகளின் போது மாணவர்கள் பெறும் சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.21.48 லட்சமாகும். வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் $250,000 ஆகும்.

2021-22 ஆம் ஆண்டில் வளாக வேலைவாய்ப்புகளைத் தேர்வுசெய்த 80 சதவீத மாணவர்கள் 2021-22 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Chennai Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment