Advertisment

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; முழுத் தகவல் இங்கே

author-image
WebDesk
New Update
sada

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) இளநிலை நிர்வாகி மற்றும் முதுநிலை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024

Advertisment

Junior Executive

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 15,000 – 50,000

Senior Executive

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2-5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ 18,000 – 60,000.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20&%20Senior%20Executive-%20Advt%20-%2021-2024.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment