சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; டிகிரி, படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
iit madras

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2025

Advertisment

Librarian 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s degree in any discipline with a Master’s degree in Library Science/Information Science/ Documentation படித்திருக்க வேண்டும். மேலும் 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: AL - 14

Chief Security Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 12

Deputy Registrar 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 12

Technical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s in Physiotherapy/Occupational Therapy படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 10

Assistant Registrar

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 10

Junior Technical Superintendent

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor’s in Biotechnology/ Bachelor’s, and M.Sc. in Biology/Life Science படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 6

Junior Superintendent 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 6

Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை – 3

வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruit.iitm.ac.in என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Iit Madras Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: