சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.03.2025
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 15,000 – 18,000 (கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்)
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.