Advertisment

NIRF தரவரிசை 2021; சென்னை ஐஐடி முதலிடம்; கல்லூரிகளில் லயோலா 3ஆம் இடம்

IIT-Madras remains top institute in India under overall category: NIRF Ranking 2021: கல்வி நிறுவனங்களின் தரவரிசை; ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம்; பொறியியலில் சென்னை ஐஐடி முதலிடம், திருச்சி என்ஐடி 9 ஆம் இடம், கல்லூரிகளில் லயோலா 3ஆம் இடம்

author-image
WebDesk
New Update
NIRF தரவரிசை 2021; சென்னை ஐஐடி முதலிடம்; கல்லூரிகளில் லயோலா 3ஆம் இடம்

NIRF தரவரிசை 2021: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தேசிய தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசையை வெளியிட்டார். இதில் ஐஐடி மெட்ராஸ் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது, ஐஐஎஸ்சி பெங்களூரு 2 வது இடத்திலும், ஐஐடி-பம்பாய் 3 வது இடத்திலும் உள்ளது.

Advertisment

ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கான தரவரிசை தவிர, என்ஐஆர்எஃப் சிறந்த கல்லூரி, சிறந்த மருத்துவ கல்லூரி, சிறந்த பல்கலைக்கழகங்கள், சிறந்த எம்பிஏ நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி, சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை, மற்றும் பல் மருத்துவம் போன்றவற்றின் தரவரிசையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக ஆராய்ச்சி பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட ஆராய்ச்சிப் பிரிவில் ஐஐடி-சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு, ஐஐடி சென்னை ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் ஐஐடி-சென்னை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த நிறுவனமாக உள்ளது.

ஒட்டுமொத்த பிரிவில் உள்ள சிறந்த நிறுவனம் என்பது  என்னவென்றால், அந்த கல்வி நிறுவனம் மற்ற அந்த துறை சார்ந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுவது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நிறுவனங்களுடனும் போட்டியிடுகிறது.

இந்த ஆண்டு ஏறக்குறைய 6,000 கல்வி நிறுவனங்கள் NIRF இல் பங்கேற்றன. தரவரிசைப்படுத்த, அனைத்து கல்வி நிறுவனங்களும் ஐந்து அளவுருக்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன: கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், வெளிப்பாடு மற்றும் உள்ளடக்கம் மற்றும் கருத்து.

இன்று அறிவிக்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆர்எஃப்) ஆறாவது பதிப்பில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) சென்னை நாட்டின் சிறந்த பொறியியல் நிறுவனமாக உருவெடுத்தது.

முதல் 10 இடங்களில் எட்டு இடங்களை பிடிப்பதன் மூலம் ஐஐடி கல்வி நிறுவனங்கள் பொறியியல் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பிரிவில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் முறையே என்ஐடி திருச்சிராப்பள்ளி மற்றும் என்ஐடி சுரத்கால் உள்ளன.

NIRF தரவரிசை 2021:

ஒட்டுமொத்த அடிப்படையில் முதன்மை நிறுவனங்கள்

ரேங்க் 1: ஐஐடி மெட்ராஸ்

ரேங்க் 2: IISc

ரேங்க் 3: ஐஐடி பம்பாய்

ரேங்க் 4: டெல்லி ஐஐடி

ரேங்க் 5: ஐஐடி கான்பூர்

பொறியியல் கல்லூரிகள்

ரேங்க் 1: ஐஐடி சென்னை

ரேங்க் 2: ஐஐடி டெல்லி

ரேங்க் 3: ஐஐடி பம்பாய்

ரேங்க் 4: ஐஐடி கான்பூர்

ரேங்க் 5: ஐஐடி கரக்பூர்

ரேங்க் 6: ஐஐடி ரூர்கி

ரேங்க் 7: ஐஐடி கவுகாத்தி

ரேங்க் 8: ஐஐடி ஹைதராபாத்

ரேங்க் 9: என்ஐடி திருச்சிராப்பள்ளி

ரேங்க் 10: என்ஐடி சுரத்கல்

மருத்துவ நிறுவனங்களின் பிரிவில் சிறந்த நிறுவனங்கள்

ரேங்க் 1: டெல்லி எய்ம்ஸ்

ரேங்க் 2: PGIMER

ரேங்க் 3: சிஎம்சி. வேலூர்

ரேங்க் 4: நிம்ஹான்ஸ், பெங்களூரு

ரேங்க் 5: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்,

கல்லூரிகளுக்கான தரவரிசை

ரேங்க் 1: டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரி

ரேங்க் 2: எல்எஸ்ஆர் மகளிர் கல்லூரி

ரேங்க் 3: சென்னை லயோலா கல்லூரி

மேலாண்மை பிரிவு

ரேங்க் 1: ஐஐஎம்-அகமதாபாத்

ரேங்க் 2: ஐஐஎம்-பெங்களூர்,

ரேங்க் 3: ஐஐஎம்-கல்கத்தா,

ரேங்க் 4: ஐஐஎம்-கோழிக்கோடு

ரேங்க் 5: ஐஐடி-டெல்லி.

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள்

ரேங்க் 1: IISc பெங்களூரு

ரேங்க் 2: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் டெல்லி

ரேங்க் 3: BHU

ரேங்க் 4: கல்கத்தா பல்கலைக்கழகம்

ரேங்க் 5: அமிர்த விஷ்வ வித்யாபீடம்

ரேங்க் 6: ஜாமியா மிலியா இஸ்லாமியா

ரேங்க் 7: மணிபால் அகாடமி உயர் கல்வி

ரேங்க் 8: ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

ரேங்க் 9: ஹைதராபாத் பல்கலைக்கழகம்

ரேங்க் 10: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras Chennai Loyola College
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment