இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சென்னை (IIT Madras) ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் (ரெனால்ட் நிசான் டெக்) ஆகியவற்றுடன் திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக கைகோர்த்து வருகிறது. இந்த கூட்டாண்மை மூலம், பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிக இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு வாய்ப்புகளை ஐ.ஐ.டி சென்னை அறிமுகப்படுத்தும். கூட்டாண்மைகள் மூலம் இதுவரை 35,000 மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras, Renault Nissan to offer more internships for BS students
கடந்த காலத்தில், ரெனால்ட் நிசான் டெக் மற்றும் ஐ.ஐ.டி சென்னை ஆகியவை பல முறை ஒத்துழைத்துள்ளன.
- ரெனால்ட் நிசான் டெக்கின் மூத்த வல்லுநர்கள் மூலம் மெஷின் லேர்னிங் ப்ராக்டீஸ் ப்ராஜெக்ட் (டிப்ளமோ அளவில்) மற்றும் ‘எக்ஸ்பிளைனபில் ஏ.ஐ’ குறித்த 140+ மணிநேர விரிவுரை ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது
- ரெனால்ட் நிசான் டெக்கில் முழுநேர பதவிகளாக மாற்றப்பட்ட மூன்று மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்கப்பட்டது.
- ரெனால்ட் நிசான் டெக் நடத்திய ‘லிவிங் வித் ஏ.ஐ’ குழு விவாதத்தில் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
— 300+ ரெனால்ட் நிசான் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈமொபிலிட்டி, 3D பிரிண்டிங், சப்ளை செயின், மெஷின் லேர்னிங், ஏ.ஐ, ஹெச்.ஆர் அனலிட்டிக்ஸ் மற்றும் பிறவற்றில் IITM CODE திட்டங்களை கற்பித்துள்ளனர்
- தகுதி அடிப்படையிலான கல்வித் உதவித்தொகை ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் கொண்ட 300 மாணவர்களுக்கு கிடைக்கிறது.
ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் ஐ.ஐ.டி சென்னையின் டீன் (கல்வி படிப்புகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், ரெனால்ட் நிசான் டெக்கின் நிர்வாக இயக்குனர் தேபாஷிஸ் நியோகி மற்றும் ஐ.ஐ.டி சென்னை அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (கோட்) தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், ஒருங்கிணைப்பாளர் ஐ.ஐ.டி.எம் பி.எஸ் பட்டம் & என்.பி.டி.இ.எல் மற்றும் ரெனால்ட் நிசான் டெக்கின் மூத்தப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
”ரெனால்ட் நிசான் டெக்குடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கல்வி மற்றும் கார்ப்பரேட் உலகங்களுக்கு இடையே பாலங்களை கட்டமைக்கும் ஐ.ஐ.டி சென்னையின் பார்வைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ரெனால்ட் நிசான் டெக் மற்றும் ஐ.ஐ.டி சென்னை இணைந்து, பல்வேறு ஈடுபாடுகளை செயல்படுத்துவதன் அடிப்படையில் ஒத்துழைப்பதற்கான ஒரு அளவுகோலை அமைக்கின்றன. கார்ப்பரேட் துறையுடன் இதுபோன்ற மேலும் பல ஈடுபாடுகளை எதிர்பார்க்கிறோம்,” என ஐ.ஐ.டி சென்னை டீன் (கல்வி படிப்புகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“