இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (IIT Madras – ஐ.ஐ.டி மெட்ராஸ்) ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் ‘டெமோ டே’ நடத்துகிறது. இந்த நிகழ்வின் போது, ஜே.இ.இ 2024 விண்ணப்பதாரர்கள் ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்திற்குச் சென்று ஐ.ஐ.டி., கல்வி முறை, வாழ்க்கை முறை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். இதில் கலந்துக் கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் askiitm.com/demo இல் பதிவு செய்யலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:
ஐ.ஐ.டி மெட்ராஸூக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள், ஜூன் 17 ஆம் தேதி ஆன்லைன் அமர்வில் பங்கேற்கலாம். ஆன்லைன் அமர்வின் போது, நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி, பிற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் கல்வி மற்றும் கல்வி சாரா வாழ்க்கை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள ஆர்வலர்கள் செயற்கைக்கோள் டெமோ நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யலாம். இது போன்ற ஒரு நிகழ்வு பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி வளாகத்தில் உள்ள SD ஆடிட்டோரியத்தில் ஜூன் 11 அன்று நடைபெறும் மற்றும் மற்றொன்று ஹைதராபாத்தில் உள்ள T-Hub இல் ஜூன் 12 அன்று நடைபெறும். மூத்த ஆசிரியர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்கள்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் தொடர்புகொள்வதற்கும், உண்மையான மற்றும் புதுப்பித்த தகவல்களை மூலத்திலிருந்து நேரடியாகப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்."
ஐ.ஐ.டி மெட்ராஸ் - தி வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸில் புதிய துறையால் வழங்கப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் பி.டெக் அறிமுகம் போன்ற சமீபத்திய மாற்றங்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் டெமோ டே என்பது ஆஸ்க் ஐ.ஐ.டி எம் முயற்சியின் ஒரு பகுதியாகும், இது நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகளைத் தவிர, askiitm.com இணையதளத்தில், படிப்புகள், ஆசிரியர்கள், வளாக வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர் தன்னார்வலர்கள் குழு கேள்விகளுக்கு பதிலளிக்கும். ஆர்வமுள்ளவர்கள் ஏற்கனவே உள்ள பதில்களையும் உலாவலாம்.
கூடுதலாக, மாணவர்கள் குழு ஐ.ஐ.டி மெட்ராஸ் தொடர்பான பல்வேறு தலைப்புகள் பற்றி இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப்பில் (YouTube) 200 க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“