இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸ் (IIT-M) முதுநிலைப் படிப்புகளுக்கான (JAM) 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத் தேர்வை நடத்துகிறது. JAM 2024 க்கான பதிவுகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்.
அதிகாரப்பூர்வ நாட்காட்டியின்படி, JAM 2024 க்கான பதிவு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கும், மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அக்டோபர் 13 வரை அவகாசம் இருக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jam.iitm.ac.in இல் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. இந்தியப் பட்டம் பெற்ற வெளிநாட்டினர், சேர்க்கை நிறுவனத்தின் கொள்கைக்கு உட்பட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இதையும் படியுங்கள்: JEE Advanced 2023; ஐ.ஐ.டி மெட்ராஸில் கடந்த 5 வருட எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் கட் ஆஃப்
JAM 2024 தேர்வு பிப்ரவரி 11, 2024 அன்று நடத்தப்பட உள்ளது. இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது தற்போது இளங்கலைப் பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் JAM 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
JAM 2024, பயோடெக்னாலஜி (BT), வேதியியல் (CY), பொருளாதாரம் (EN), புவியியல் (GG), கணிதம் (MA), கணிதப் புள்ளியியல் (MS) மற்றும் இயற்பியல் (PH) ஆகிய ஏழு தேர்வுத் தாள்களில் கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil