ஐ.ஐ.டி மெட்ராஸ் 2-வது வெளிநாட்டு வளாகத்தை இலங்கையில் அமைக்க திட்டம்; இயக்குனர் தகவல்

ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது 2-வது வெளிநாட்டு வளாகத்தை இலங்கையில் அமைக்க திட்டம்; சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருவதாக இயக்குனர் தகவல்

ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது 2-வது வெளிநாட்டு வளாகத்தை இலங்கையில் அமைக்க திட்டம்; சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருவதாக இயக்குனர் தகவல்

author-image
WebDesk
New Update
NIRF rankings 2023

ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது 2-வது வெளிநாட்டு வளாகத்தை இலங்கையில் அமைக்க திட்டம்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

R Radhika

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் (IIT Madras) தனது இரண்டாவது வெளிநாட்டு வளாகத்தை இறுதி செய்யும் பணியில் உள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸ் தகவலின்படி, நிறுவனம் விரைவில் இலங்கையில் ஒரு வளாகத்தை அமைப்பதற்கான "சாத்தியமான ஆய்வை" நடத்தும் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் வி காமகோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras to visit Sri Lanka soon to conduct ‘feasibility study’: Director on new campus

நிறுவனத்தின் இயக்குனரின் கூற்றுப்படி, ஐ.ஐ.டி மெட்ராஸின் இரண்டாவது வெளிநாட்டு வளாகத்தை இலங்கையில் அமைக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கையில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்று ஐ.ஐ.டி வளாகத்திற்கு வந்து ஆலோசித்தாக இயக்குநர் காமகோடி கூறினார்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தை இலங்கையில் அமைப்பது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்ப நிலையில் உள்ளன. இலங்கையில் இருந்து ஒரு தூதுக்குழு எங்கள் வளாகத்திற்கு வந்தது, விரைவில் ஐ.ஐ.டி மெட்ராஸின் பிரதிநிதிகள் ஒரு சாத்தியக்கூறு ஆய்வுக்காக இலங்கைக்கு செல்வார்கள்,” என்று காமகோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

Advertisment
Advertisements

ஐ.ஐ.டி மெட்ராஸ் கடந்த ஆண்டு நவம்பரில் ப்ரீத்தி அகல்யாம்-ஐ இயக்குநராகக் கொண்டு டான்சானியாவின் சான்சிபாரில் தனது முதல் வெளிநாட்டு வளாகத்தைத் தொடங்கியது. ஒரு தற்காலிக தளத்திலிருந்து செயல்படும் வளாகம் தற்போது இரண்டு முழுநேர படிப்புகளை வழங்குகிறது, அவை தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இரண்டு ஆண்டு முதுகலை தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நான்கு ஆண்டு இளங்கலை அறிவியல்.

ஐ.ஐ.டி மெட்ராஸைத் தவிர, ஐ.ஐ.டி டெல்லியும் அபுதாபியில் ஒரு வளாகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது, அபுதாபியில் ஐ.ஐ.டி டெல்லி 2024 முதல் பட்டங்களை வழங்கத் தொடங்கும். இந்த நிறுவனம் அதன் வரவிருக்கும் அபுதாபி வளாகத்தில் ஆற்றல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மையில் (ET&S) M Tech படிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras Sri Lanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: