/tamil-ie/media/media_files/uploads/2023/08/IIT-Madras.jpg)
IIT Madras
IIT Madras: கடந்த 5 ஆண்டுகளாக, கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF), இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT-M) பொறியியல் கல்லூரிகள் பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பொறியியல் மட்டுமின்றி, ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு முதன்மையான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமாகவும், ஒட்டுமொத்த தரவரிசைப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக NIRFன் ஆராய்ச்சி தரவரிசைப் பிரிவில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ ரேங்க கேட்கக் கூடாது; சாதி பாகுபாட்டைத் தவிர்க்க ஐ.ஐ.டி பாம்பே உத்தரவு
ஐ.ஐ.டி-மெட்ராஸின் கடந்த 5 ஆண்டுகள் NIRF தரவரிசை
/tamil-ie/media/media_files/uploads/2023/08/iitm-nirf.jpg)
ஐ.ஐ.டி-மெட்ராஸ் உலக அளவில் சிறந்த நிறுவனங்களில் இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 'QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்' இது தொடர்ந்து 300க்கு குறைவான தரவரிசையில் உள்ளது.
ஐ.ஐ.டி-மெட்ராஸின் கடந்த 4 ஆண்டுகள் QS உலக பல்கலைக்கழக தரவரிசை
/tamil-ie/media/media_files/uploads/2023/08/iitm-qs.jpg)
இந்தியாவைச் சேர்ந்த ஐ.ஐ.டி.,கள் தங்கள் தரவரிசை அளவுருக்களில் உள்ள சிக்கல் காரணமாக ‘உலக பல்கலைக்கழக தரவரிசை’யை புறக்கணித்தன. ஐ.ஐ.டி.,கள் 'உலக பல்கலைக்கழக தரவரிசை' தங்கள் தரவரிசை அளவுருக்கள் குறித்து வெளிப்படையாக இல்லை என்று புகார் கூறுகின்றன.
ஐ.ஐ.டி-மெட்ராஸ் 1959 இல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதில் 591 ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் 2,105 இளங்கலை மாணவர்கள், 4,112 முதுகலை மாணவர்கள், 746 MS ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் 2,963 PhD ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளனர். சமீபத்தில், ஐ.ஐ.டி-மெட்ராஸுக்கு இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.