Most IITs see rise in job offers to graduates after Covid-induced slump: வேலை வாய்ப்பு சீசனின் முதல் கட்டம் முடிவடைந்த நிலையில், பெரும்பாலான ஐஐடிகள் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் ஒரு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் சில நிறுவனங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய வேலைவாய்ப்பு எண்ணிக்கையைக் கூட விஞ்சியுள்ளன.
IITகளால் பகிரப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை, உலகெங்கிலும் கொரோனா தாக்கத்தின் இடையூறுகளால் ஆட்சேர்ப்பு பாதிக்கப்பட்டபோது, 2020 ஐ விட சர்வதேச நிறுவனங்களின் பங்கேற்புடன் கணிசமாக உயர்ந்து, பெரும்பாலான ஐஐடிகளில் தலா 1,200 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, IIT-கான்பூரில் வேலை வாய்ப்பு இயக்கத்தில் சர்வதேச நிறுவனங்களின் பங்கேற்பு 2020 இல் 19 இல் இருந்து இந்த ஆண்டு 47 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஐஐடிகளில் வேலைவாய்ப்பு அளிக்கும் சிறந்த நிறுவனங்களாக, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாப்ட், இஎக்ஸ்எல் அனலிட்டிக்ஸ், கூகுள், உபெர், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ரகுடென் மொபைல் போன்றவை உள்ளன.
பழைய நிறுவனங்களில், ஐஐடி-கான்பூர், ஐஐடி-டெல்லி, ஐஐடி-மெட்ராஸ் மற்றும் ஐஐடி-ரூர்க்கி ஆகியவற்றில் முறையே 1,300, 1,250, 1,316 மற்றும் 1,243 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஐஐடி-டெல்லி பெற்ற வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டின் முதல் கட்டத்தை விட 45 சதவீதம் அதிகமாகும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "180 பேருக்கு முன் வேலை வாய்ப்பு சலுகைகள் (Pre Placement Offers - PPO) கிடைத்துள்ளது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும்" என்று அந்த அதிகாரி கூறினார். ஐஐடி-காரக்பூர், ஐஐடி-மெட்ராஸ் மற்றும் ஐஐடி-கான்பூர் ஆகியவற்றில் முறையே 400, 226 மற்றும் 156 பேர் முன் வேலை வாய்ப்பு சலுகைக்களைப் (PPO) பெற்றுள்ளனர்.
IIT காரக்பூர், டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் 1,100 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு சலுகைகள் மூலம் அதன் முதல் கட்டத்தில், வேலைவாய்ப்புகளின் மூன்றாம் நாளில் "IIT களின் வரலாற்றில் எல்லா நேரத்திலும் மிக உயர்ந்த வேலை வாய்ப்பு சாதனையை" உருவாக்கியதாகக் கூறியுள்ளது. வேலை வாய்ப்பு இயக்கத்தின் ஏழாவது நாளில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர், இது "முந்தைய ஆண்டுகளின் மொத்த வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருந்தது" என்று அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐஐடி-டெல்லி அதிகாரி ஒருவர், வழங்கப்படும் சராசரி சம்பள அளவும் உயர்ந்துள்ளதாகக் கூறினார். இதை மற்ற வளாகங்களின் அதிகாரிகளும் கூறினார்.
"இந்த கட்டத்தில் வேலை வாய்ப்பு வசதிகளைப் பெற ஆர்வம் காட்டிய மாணவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட வேலை விவரங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன," என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐஐடி-கவுஹாத்தியில் உள்ள தொழில் மேம்பாட்டு மையத்தின் தலைவர் அபிஷேக் குமார், இதுவரை 837 மாணவர்கள் அதாவது இளங்கலைப் பட்டதாரிகளில் 86.52 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார். மீதமுள்ள தரவுகள் தொகுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.
ஐஐடி-கான்பூரில், சர்வதேச நிறுவனத்தால் $2,87,550 மற்றும் உள்நாட்டு நிறுவனத்தால் ரூ.1.2 கோடி என இதுவரை வழங்கப்பட்டுள்ள மிக உயர்ந்த பேக்கேஜ்கள். மொத்தத்தில், ஆண்டுக்கு 1 கோடிக்கு மேலான பேக்கேஜில் 49 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர், இது இதுவரை நிறுவனம் பெற்றுள்ள அதிகபட்ச சலுகையாக உள்ளது.
நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் அபய் கரண்டிகர், இந்த எண்கள் "பொருளாதாரத்தின் நிலையான மறுமலர்ச்சி மற்றும் முக்கிய துறை வேலைகளின் அதிகரிப்புக்கு" சாதகமான அறிகுறியாகும் என்றார்.
ஐஐடி-ரூர்க்கியில் இதுவரை அதிக உள்நாட்டு மற்றும் சர்வதேச சலுகைகள் முறையே ரூ. 1.8 கோடி மற்றும் ரூ. 2.15 கோடி, மேலும் ஐஐடி-டெல்லியில் உள்ள 22க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரூ.0.9 - 2.4 கோடி வரம்பில் வருடாந்திர CTC உடன் சலுகைகளைப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், ஐஐடி-பாம்பேயில் ஆண்டுக்கு $2,87,000 Uber வழங்கும் முன் வேலைவாய்ப்பு சலுகை (PPO) ஆகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.