தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி: பணிக் குழுவை அமைத்த மத்திய அரசு

Technical Education in mother tongue :

Imparting technical education in Mother Tongue:  மாணவர்களின் தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பணிக்குழுவை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அமைத்தார்.

புதிய கல்விக் கொள்கையில், தாய் மொழிக்கும், உள்ளூர் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சார்,  5-ஆம் வகுப்பு வரையிலும், முன்னுரிமை அடிப்படையில் 8-ஆம் வகுப்பு வரையிலும் பயிற்று மொழி, தாய் மொழியாக இருக்கலாம் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது” என்று தெரிவித்தார்.

பணிக்குழு பற்றி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், “ எந்த மொழியும் எந்த மாணவரின் மீதும் திணிக்கப்படாது,, ஆனால், ஆங்கிலத்தில் பாடங்களை பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமப்படும் திறன் வாய்ந்த மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியை இழக்காத வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் ” என்று தெரிவித்தார்.

தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் பங்கேற்றார். உயர் கல்வி செயலாளர் அமித் காரே, ஐஐடி இயக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளை தங்களது தாய்மொழிகளிலேயே மாணவர்கள் கற்பதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பணிக்குழுவை அமைக்க கூட்டம் ஒருமனதாக முடிவெடுத்தது .

உயர் கல்வி செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பணிக்குழு, பல்வேறு பங்குதாரர்களின் ஆலோசனைகளை பரிசீலித்து தன்னுடைய அறிக்கையை ஒரு மாதத்தில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Imparting technical education in mother tongue moe constitute taskforce

Next Story
பி.எட் சேர்க்கை தேதி அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?Upper limit age for teacher recruitment updated tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express