Advertisment

UPSC Civil Services Exam 2019: ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு...

தேர்வெழுத வரும் போது ஹால் டிக்கெட் மற்றும், அடையாள அட்டையை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UPSC Prelims

யூ.பி.எஸ்.சி (UPSC) முதல்நிலைத் தேர்வுக்கான முன்பதிவு கடந்த பிப்ரவரி 19-ம் தேதியிலிருந்து தொடங்கியிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழில் உள்ளபடி தங்களது பெயர்களைக் குறிப்பிட வேண்டுமென யூ.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

அதே பெயர் தான் முதல்நிலைத் தேர்வின் ஹால் டிக்கெட்டிலும் பதிவு செய்யப்படும். அதோடு சேர்ந்து புகைப்படத்துடன் கூடிய அரசாங்க அடையாள அட்டையையும் ஸ்கேன் செய்து இணைக்கும் படியும் யூ.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்வெழுத வரும் போது ஹால் டிக்கெட் மற்றும், அடையாள அட்டையை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கு மார்ச் 18-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு ஜூன் 2, 2019-ல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment