Advertisment

யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்தை எவ்வாறு எதிர்கொள்வது ?

எவ்வாறாயினும், ஆங்கில திறன்களை வளர்க்க, ஓரிரு புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. இந்தியக் குடிமை பணிக்கு ஆர்வலர்களைத் தயார்படுத்தக்கூடிய ஒரு சில வழிமுறைகளையும் இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நீங்கள் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு பயிற்றுவித்த (நீங்கள் பயின்ற) மொழி எதுவாக இருந்தாலும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் ஒரு அடிப்படை நிலை வாசிப்பு, எழுதுதல், புரிந்துகொள்ளுதல் மற்றும் பேசும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். தேர்வில் மல்டிபிள் சாய்ஸ் கொண்ட கேள்விகளாக இருந்தாலும், ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

ஆங்கிலம் அல்லாத நடுத்தர கல்வி பின்னணியைச் சேர்ந்த பல யுபிஎஸ்சி ஆர்வலர்களும், தங்கள் இலக்கணம், வாக்கிய அமைப்பு, சொல்லகராதி, சொற்றொடர்கள் மற்றவர்களுடன் இணையாக இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும், கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, ‘ரமேஷ் சிங் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான தற்கால கட்டுரைகள்’ பெரிதும் உதவியாக இருக்கும்.

நேர்காணல் சுற்றுகளிலும், ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அடிப்படை எண்ணங்களை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தவும், மற்றவரின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் திறனை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

யுபிஎஸ்சி நேர்காணல் தயாரிப்புக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகம் ஸ்மரக் ஸ்வைனின்' சிவில் சர்வீசஸ் ஆளுமை சோதனையை எதிர்கொள்வதற்கான கடைசி அடிப்படை குறிப்புகள்' என்ற புத்தகம்.

publive-image

 

எவ்வாறாயினும், ஆங்கில திறன்களை வளர்க்க, ஓரிரு புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. இந்தியக் குடிமை பணிக்கு ஆர்வலர்களைத் தயார்படுத்தக்கூடிய ஒரு சில வழிமுறைகளையும் இங்கே காணலாம் -

வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்: ஒருவர் தினசரி ஒன்று மட்டுமல்ல, பல செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும், அத்துடன் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்க வேண்டும். இது ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் கேட்கும் திறனை வளர்ப்பது மட்டுமல்லாமல், சொற்கள் மீதுள்ள நமது ஆளுமையைம் வளமாக்கும்.

 

அனைத்து வீடியோக்களையும் பார்க்க

 

சொற்கள் பற்றிய அறிவு  : ஒருவர் ஒரு வலுவான ஆங்கில சொற்களுக்கான அறிவு தளத்தை உருவாக்கி கொள்ள  வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆங்கில சொற்களஞ்சியத்தை உருவாக்க சந்தையில் பல புத்தகங்கள் உள்ளன. நார்மன் லூயிஸ் எழுதிய 'வேர்ட் பவர் மேட் ஈஸி', விக்ரம் சிங்கின் 'யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பொது நிர்வாக அகராதி', கும்கம் குப்தாவின் 'அன்றாட சொற்களஞ்சியம்'  ஆகியவை சில புத்தகங்கள்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

ஆர்வலர்கள் தினமும் 25 முதல் 50 சொற்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஒவ்வொரு வார்த்தையிலும் குறைந்தது 5 முதல் 10 வாக்கியங்களை எழுதி பார்க்க வேண்டும்.

ஆங்கில இலக்கணத்தை சோதித்து பாருங்கள்: ஆங்கில இலக்கணத்தை புரிந்துக் கொள்ள ஆன்லைன் வீடியோக்கள்,  புத்தகங்கள் நிறைய உள்ளன. மேலும், ஆன்லைனில் உங்கள் ஆங்கில இலக்கணத்தை சோதித்தும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆங்கில  இலக்கண டெஸ்ட் போர்டல்கள் இணையத்தில் நிறைய உள்ளன.

கேட்க கற்றுக்கொள்ளுங்கள்: மொழி என்பது பேசுவதற்கு  மட்டுமல்ல, நாம் மற்றவரையும் கவனமாகக் கேட்க வேண்டும். இதைப் பயிற்சி செய்ய, ஒருவர் ஆன்லைனில் மாக் இன்டர்வியு  கலந்து கொள்ளலாம்.  மேலும், கடந்த காலத்தில் கேட்கப்பட்ட  அனைத்து கேள்விகளையும் பட்டியலாய் உருவாகிக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக, நமது  தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், மதிப்பிடுவதற்கும் ஒரு சிறந்த நுட்பம் நமது வீட்டின் கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்வதாகும்.

Upsc Civil Service Exam Upsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment