அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்வு: நடப்பு கல்வி ஆண்டில் 3.12 லட்சம் மாணவர்கள் சேர்க்கை!

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் 22,757 பேரும், 1-ம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் 1 லட்சத்து 72,676 பேரும், ஆங்கில வழிக் கல்வியில் 52,57 பேரும், 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 65,391 பேரும் என மொத்தம் 3.12 லட்சம் மாணவ-மாணவிகள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corporation schools

அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்வு: நடப்பு கல்வி ஆண்டில் 3.12 லட்சம் மாணவர்கள் சேர்க்கை!

அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மாணவ-மாணவிகளுக்கான நலத்திட்டங்களையும் அரசு விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசுப் பள்ளிகளில் நேற்று வரையிலான தகவலின்படி, மழலையர் வகுப்புகளில் 22 ஆயிரத்து 757 பேரும், 1-ம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 676 பேரும், ஆங்கில வழிக் கல்வியில் 52 ஆயிரத்து 57 பேரும், 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 65 ஆயிரத்து 391 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 881 மாணவ-மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் இதுவரை சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Advertisment

இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 985 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாக செங்கல்பட்டு (9,528 பேர்), திருப்பூர் (9,385), சேலம் (8,573), தென்காசி (8,019) போன்ற மாவட்டங்கள் வருகின்றன. கடந்த ஆண்டு 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த மாதம் இறுதி வரையில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் இருக்கும் சூழலில், கடந்த ஆண்டு எண்ணிக்கையை விரைவில் கடந்துவிடும் என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசின் நலத்திட்டங்கள், (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்), நவீன தொழில்நுட்ப ஆய்வகம், காலை உணவுத் திட்டம் போன்றவை அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

Educational News School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: