நாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு

online Essay Competition on the theme 'Aatmanirbhar Bharat - Swatantra Bharat',

online Essay Competition on the theme 'Aatmanirbhar Bharat - Swatantra Bharat',

author-image
WebDesk
New Update
education and job News

Tamil news

Independence Day online Essay Competition :  இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  பொருளாதாரம், கட்டமைப்பு, செயல்பாட்டு முறை, துடிப்பான மக்கள், தேவை ஆகிய ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Advertisment

இதற்கிடையே, இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் ‘தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா’ எனும் தலைப்பின் கீழ், மனித  வள மேம்பாட்டு அமைச்சகம், MyGov-உடன் சேர்ந்து கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியை என்சிஇஆர்டி எடுத்து நடத்துகிறது.

மன்த வள மேம்பாட்டு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும், 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்தது.

இந்த கட்டுரைப் போட்டி, தற்சார்பு இந்தியாவை மையப்படுத்தி நடைபெறுகிறது. மாணாக்கர்கள், கீழ்காணும் பத்து அம்சங்களின் கீழ் கட்டுரை வடயுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

Advertisment
Advertisements

1. தற்சார்பு இந்தியாவுக்கு இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவை மிகப்பெரிய ஊக்குவிப்புகள்

2. 75-இல் இந்தியா ; தற்சார்பு இந்தியாவை நோக்கி நாடு நடைபோடுகிறது

3. ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலமாக தற்சார்பு இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் போது புதுமை செழிக்கிறது.

4. டிஜிட்டல் இந்தியா; கோவிட்-19-இல், அதற்கும் அப்பால் வாய்ப்புகள்

5. தற்சார்பு இந்தியா- தேசிய மேம்பாட்டில் மாணவர்களின் பங்கு

6. தற்சார்பு இந்தியா; பாலினம், சாதி, இன வேறுபாட்டிலிருந்து விடுதலை

7. தற்சார்பு இந்தியா; உயிரிப்பன்முகத்தன்மை மற்றும் விவசாய முன்னேற்றம் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல்.

8. நான் என் உரிமைகளை அனுபவிக்கும் போது, தற்சார்பு இந்தியாவைச் செயல்படுத்தும் எனது கடமையை மறக்கக்கூடாது.

9. எனது உடல் தகுதி எனது செல்வமாகும். அது தற்சார்பு இந்தியாவுக்கு மனித மூலதனம்.

10. தற்சார்பு இந்தியாவுக்காக, நீலப்பாதுகாப்பிலிருந்து பசுமைக்கு செல்லவும்.

யார் கலந்து கொள்ளலாம்:          

நாடு முழுவதும், 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

கட்டுரை அனுப்ப வேண்டிய காலக்கெடு: 

MyGov இணைப்பை பயன்படுத்தி மாணாக்கர்கள் , ஆகஸ்ட் 14க்கும் தங்கள் கட்டுரை தாக்கல் செய்ய வேண்டும்.

போட்டி எவ்வாறு நடைபெறும்: 

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இரண்டு மட்டங்களில் கட்டுரைகள் தேர்வு நடைபெறும். முதலாவதாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மட்டத்தில் கட்டுரைகள் இறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 10 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி தேர்வு செய்வதற்காக மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். என்சிஇஆர்டி நிபுணர்கள் குழு தேசிய அளவில் கட்டுரைகளை தேர்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும், தலா 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அதாவது, என்சிஇஆர்டி-யால், இடைநிலை, மேல்நிலை மட்டங்களில் தேர்வு செய்யப்படும்.  தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் பரிசுகள் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், விவரங்களுக்கு, இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: