scorecardresearch

NIRF ranking 2020: டெல்லி கல்லூரி டாப் – லயோலா கல்லூரிக்கு எந்த இடம்?

NIRF ranking 2020: கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை நடைமுறைகள், தேர்ச்சி விகிதம், எல்லை மற்றும் உள்ளடக்கம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIRF ranking 2020: டெல்லி கல்லூரி டாப் – லயோலா கல்லூரிக்கு எந்த இடம்?

NIRF ranking 2020: டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிராண்டா ஹவுஸ், தேசிய அளவில் சிறந்த கல்லூரியாக தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வாகியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கண்காணிப்பில், தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் சார்பில் (National Institute Ranking Framework (NIRF)) ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டிற்கான தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் 10 இடங்களில் உள்ள கல்லூரிகள்

1 – மிராண்டா ஹவுஸ், டெல்லி<br />2 – லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி – டெல்லி
3 – இந்து கல்லூரி
4- செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி – டெல்லி
5 – பிரசிடென்சி கல்லூரி – சென்னை<br />6 – லயோலா கல்லூரி – சென்னை
7 – செயின்ட் சேவியர் கல்லூரி
8. ராமகிருஷ்ணா மிஷன் வித்யமந்திரா – கோல்கட்டா
9 – ஹன்ஸ்ராஜ் கல்லூரி – டெல்லி
10 – பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி – கோவை

டெல்லி பல்கலைகழக கட்டுப்பாட்டில் உள்ள 5 கல்லூரிகள், டாப் 10 பட்டியலில் 5 இடங்களை பிடித்துள்ளன. கடந்தாண்டும் இதேநிலை தான் நீடித்தது. கடந்தாண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்து கல்லூரி, இந்தாண்டு 3வது இடம் பிடித்துள்ளது. ,லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னையில் உள்ள பிரசிடென்சி, லயோலா கல்லூரிகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நிஷாங், தன சமூகவலைதளத்தில், 10 பிரிவுகளில், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளார். பல் மருத்துவமனைகளுக்கென்று இந்தாண்டு தனியாக தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை நடைமுறைகள், தேர்ச்சி விகிதம், எல்லை மற்றும் உள்ளடக்கம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – NIRF ranking 2020: Miranda House best college; list of top 10 colleges in India

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: India best colleges nirf ranking human resource development ministry mhrd delhi university

Best of Express