இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Executive
காலியிடங்களின் எண்ணிக்கை : 47
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.03.2024 அன்று 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ibpsonline.ibps.in/ipppblfeb24/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750, இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 150
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ippbonline.com/documents/31498/132994/1710478221579.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“