scorecardresearch

குறைந்த கல்வித் தகுதி போதும், சென்னை அஞ்சல் துறையில் வேலை; முந்துங்க மக்களே!

நீங்கள் குறைந்த கல்வித் தகுதி கொண்டவரா, கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு டிரைவிங் தெரியுமா? HMV லைசென்ஸ் வைத்திருக்கிறீர்களா, அது போதும் அஞ்சல் துறையில் Skilled Artisans பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க உடனடியாக முந்துங்கள்.

What will be the KVP account interest rate in New Year
மத்திய அரசு கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் திருத்துகிறது.

கால் காசு பணம் ஆனாலும் அரசு வேலை வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா, ஆனால், கல்வித் தகுதி குறைவாக உள்ளதா, கவலைப் பட வேண்டாம், 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும் சென்னை அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு உள்ளது. உடனடியாக முந்துங்கள் மக்களே!.

நீங்கள் குறைந்த கல்வித் தகுதி கொண்டவரா, கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு டிரைவிங் தெரியுமா? HMV லைசென்ஸ் வைத்திருக்கிறீர்களா, அது போதும் அஞ்சல் துறையில் Skilled Artisans பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கடசி நாளான 09.01.2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பணிக்கான வேலை வாய்ப்பு விவரம்:

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.1.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

India Post காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Skilled Artisans பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் Driving License (HMV) வைத்திருக்க வேண்டும்.

India Post வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Post Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Post தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி,Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ வலைதளத்துக்கு சென்று அறிவிப்பை பாருங்கள்.

Post Office விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/ Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்றவர்கள் – ரூ.400/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.1.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: India post skilled artisans job notification fot low qualification