Advertisment

விமானப் படையில் அக்னிவீர் வேலை வாய்ப்பு; 3500 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு; 3500 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
air force jobs

விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3500 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

AGNIVEERVAYU

காலியிடங்களின் எண்ணிக்கை: 3500

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : முதல் ஆண்டு ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு ரூ. 33,000, மூன்றாம் ஆண்டு ரூ. 36,500, நான்காம் ஆண்டு ரூ. 40,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 550

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment