scorecardresearch

விமானப் படையில் சேர ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள் – திருச்சி ஆட்சியர்

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் Airmen (Medical Assistant Trade) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; தகுதி வாய்ந்த இளைஞர்கள் கலந்துக் கொள்ள திருச்சி ஆட்சியர் அழைப்பு

விமானப் படையில் சேர ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள் – திருச்சி ஆட்சியர்
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பில் இளைஞர்கள் கலந்துக் கொள்ள திருச்சி ஆட்சியர் அழைப்பு

இந்திய விமானப்படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளர் Airmen (Medical Assistant Trade) பணிக்கான காலியிடத்திற்கான “விமானப்படை ஆட்சேர்ப்பு பேரணி” (Walk-in-Interview) பிப்ரவரி 1 இன்று முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தக் காலியிடத்திற்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளின் குறைந்த பட்சம் 50% மதிப்பெண் பெற்றுள்ள 17 -21 வயதிற்குள் உள்ளோர் பிப்ரவரி 01 மற்றும் 12 ஆம் தேதிகளில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

மேற்காணப்பட்ட பாடப்பிரிவுகளில் 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண் பெற்றுள்ள மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டத்தில் குறைந்தபட்சம் 50% சதவீதம் மதிப்பெண் பெற்ற 19-24 வயதிற்குள் உள்ளோர் பிப்ரவரி 07 மற்றும் 08 ஆம் தேதிகளில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்,

இதையும் படியுங்கள்: 3000 காலிப்பணியிடங்கள்… 70-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்கள் : தென்காசியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

மேலும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரம் உடையவராக இருத்தல் வேண்டும். தகுதியுடைய இளைஞர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ஒன்றிற்கு 14,600/, மற்றும் பயிற்சி முடித்த பிறகு மாத ஊதியமாக 26,900/- மற்றும் மத்திய அரசின் இதரப்படிகள் (Allowance) வழங்கப்படும்.

நேர்காணலுக்கு வருபவர்கள் காலை 6.00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேலை நாடுநர்கள் தங்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நான்கு (4) நகல்கள் மற்றும் 10 Passport size புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும்.

NCC சான்றிதழ் உள்ளோருக்கு, கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இது குறித்த தகவல்களை http://www.airmenselection.cdac.in என்ற இணையதளத்திலோ அல்லது MYIAF என்ற கைப்பேசி செயலியிலோ தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திவை நேரிலோ அல்லது 0431-2413570, 94990-55901 & 949-55002 என்ற தொலைபேசி எண்களிளோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Indian air force jobs 2023 trichy collector calls youths to use this opportunity

Best of Express