Advertisment

Army Jobs; இந்திய ராணுவத்தில் வேலை; இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 40 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Army Jobs; இந்திய ராணுவத்தில் வேலை; இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான தொழில்நுட்ப பட்டதாரி பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. ராணுவத்தில் பணிபுரிய ஆசைப்படுபவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; 731 காலியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

காலியிடங்களின் விவரம்

Civil - 11

Computer - 9

Electrical - 3

Electronics - 6

Mechanical – 9

Others - 2

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அல்லது தொடர்புடைய பிரிவுகளில் இன்ஜினியரிங் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 01.07.2023 அன்று 20 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 56,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் மற்றும் மாஸ்டர் டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு http://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC_137_NOTIFICATION.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment