இந்திய கடலோர காவல் படையில் Navik மற்றும் Yantrik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 22.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
இதையும் படியுங்கள்: NABARD recruitment 2022; நபார்டு வங்கியில் 177 அசிஸ்டெண்ட் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Navik (General Duty)
காலியிடங்களின் எண்ணிக்கை – 225
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
சம்பளம் : ரூ 21,700
Navik (Domestic Branch)
காலியிடங்களின் எண்ணிக்கை – 40
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
சம்பளம் : ரூ 21,700
Yantrik
காலியிடங்களின் எண்ணிக்கை – 35 (Mechanical – 16, Electrical – 10, Electronics - 9)
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Mechanical/ Electrical/ Electronic பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
சம்பளம்: ரூ. 29,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.250 ஆக உள்ளது. SC/ST பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil