இந்திய கடலோர காவல் படையில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 170 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 27.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
Assistant Commandant
காலியிடங்களின் எண்ணிக்கை: 170
General Duty (GD) – 140
Tech (Engg/ Elect) - 30
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.06.2025 அன்று 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
சம்பளம்: ரூ 56,100
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgcatreg/candidate/login என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.250 ஆக உள்ளது. SC/ST பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.