10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: கடலோரக் காவல் படையில் வேலை

Indian Coast Guard , Navik Vacancy : 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

Indian Coast Guard Navik recruitment 2021:  இந்தியக் கடலோரக் காவல் படையில், ‘நாவிக்’ என்ற பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, வரும் நவம்பர் 30ம் தேதி தொடங்கி, டிசம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது .உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் டிசம்பர் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.joinindiancoastguard.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட  தேர்வர்கள் ஒரு சமையல்காரர் அல்லது கப்பல் பணியாளர் போன்ற பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

மொத்த காலியிடங்கள் : 50

வயது தகுதி:  ஏப்ரல் 1ம் தேதியன்று, தேர்வர்களின் வயது 18க்கு குறையாமலும், 22-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பணிக்கு,10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை கட்-ஆப்பில் தளர்வு இருக்கும்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இந்திய கடலோர காவல்படை நவிக் ஆட்சேர்ப்பு 2021: சம்பளம்

அடிப்படை ஊதியம் ரூ .21,700.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian coast guard navik recruitment check eligibility last date to apply joinindiancoastguard gov in

Next Story
10, 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு பற்றி டிசம்பரில் முடிவு: செங்கோட்டையன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com