'பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதா?' - என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டங்களுக்கு எதிராக ஐ.ஹெச்.சி கொந்தளிப்பு

என்.சி.இ.ஆர்.டி-ன் புதிய பாடத்திட்டங்கள், இந்தியப் பிரிவினையின் வரலாற்றைத் திரித்து, மாணவர்களின் மனதில் வகுப்புவாதக் கருத்துகளை விதைப்பதாக இந்திய வரலாற்றுப் பேரவை (IHC) குற்றம் சாட்டியுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி-ன் புதிய பாடத்திட்டங்கள், இந்தியப் பிரிவினையின் வரலாற்றைத் திரித்து, மாணவர்களின் மனதில் வகுப்புவாதக் கருத்துகளை விதைப்பதாக இந்திய வரலாற்றுப் பேரவை (IHC) குற்றம் சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
NCERT modules

'பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதா?' - என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டங்களுக்கு எதிராக ஐ.ஹெச்.சி கொந்தளிப்பு

இந்திய பிரிவினையின் பயங்கரங்களை நினைவுபடுத்தும் வகையில், பள்ளிப் பாடத்திட்டங்களில் என்.சி.இ.ஆர்.டி (NCERT) புதிய தொகுதிகளை (modules) அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் கூட்டமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவை (IHC), இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "இது பள்ளி மாணவர்களின் மனதில் பிழையான, வகுப்புவாத வரலாற்றைத் திணிக்கும் செயல்" என கண்டனம் தெரிவித்துள்ளது.

யார் காரணம்? புதிய விளக்கம்

Advertisment

புதிய பாடத்திட்டங்கள் ஒரு அதிரடி மாற்றத்தை முன்வைக்கின்றன. இத்தனை நாளாக பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே காரணம் எனப் பேசப்பட்டுவந்த நிலையில், NCERT-ன் புதிய தொகுதிகள், ஜின்னா, காங்கிரஸ், மற்றும் மவுண்ட்பேட்டன் ஆகிய 3 தரப்பினரையும் பிரிவினைக்கு பொறுப்பாக்குகின்றன என்று ஆகஸ்ட் 25 தேதியிட்ட இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜின்னா - பிரிவினையைக் கோரியவர்.

காங்கிரஸ் - அதை ஏற்றுக்கொண்டது.

மவுண்ட்பேட்டன் - அதை முறையாகச் செயல்படுத்தி அமல்படுத்தியவர்.

ஆக, பிரிவினையின் மொத்த பழியையும் காங்கிரஸ் மீதும் சுமத்தும் வகையில் இந்த பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. அதே சமயம், “பிரித்தாளும் சூழ்ச்சி” மூலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை எனச் சொல்வதுதான் வரலாற்று ஆசிரியர்களின் பிரதான விமர்சனமாக உள்ளது. இதில் ஒன்று உயர்நிலை (9 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் மற்றொன்று நடுநிலை (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வகுப்புகளுக்கானது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மேலும், இந்த பாடத்திட்டங்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக இந்திய வரலாற்றுப் பேரவை (IHC) குற்றம்சாட்டியுள்ளது. பிரிவினையின்போது இந்துக்களும், சீக்கியர்களும் தாக்கப்பட்டதையும், அவமானப்படுத்தப்பட்டதையும் மட்டுமே இந்தத் தொகுதிகள் குறிப்பிடுகின்றன. ஆனால், பதிலுக்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையும், படுகொலைகளையும் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

Advertisment
Advertisements

"1857-ல் இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று போராடியதைக் கண்டு பயந்த பிரிட்டிஷார், பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியே நாட்டைப் பிரித்தனர். இது பிரிட்டிஷாரின் நீண்டகாலத் திட்டம்" என IHC தனது தீர்மானத்தில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.

ஆக, வரலாற்றின் உண்மைத் தன்மையை மறைத்து, இளைய தலைமுறையினரின் மனதில் தவறான கண்ணோட்டத்தை விதைக்கிறார்களா என்ற கேள்வி இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்தப் புதிய பாடத்திட்டங்கள், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைக்கின்றன என்பது மட்டும் உண்மை.

ncert Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: