கணிதமேதை ராமானுஜரை கவுரவிக்க 7 கோடி நன்கொடையளித்த கணித பேராசிரியர்!

இதனை கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

Mathematician Varadharajan

இந்திய கணிதமேதை ராமானுஜரை போற்றும் விதமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணிதமேதை வரதராஜன் – வேதா தம்பதியினர் 10 லட்சம் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில், இந்திய கணிதமேதை ராமானுஜரை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பேராசிரியர் பணியிடம் நிறுவப்பட இருக்கிறது. இதற்கு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற கணித பேராசிரியர் வரதராஜன்-வேதா தம்பதியினர் 10 லட்சம் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு ரூபாய் 7 கோடி.

இதனை கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆட்டோ மார்ஃபிக் சிறப்பு விபரங்கள், எண்ணியல் கோட்பாட்டின் முக்கிய கருத்துகள், பிரதிநிதித்துவ கோட்பாடு, குவாண்டம் பிஸிக்ஸ் ஆகிய வரதராஜனின் சிறப்புப் பிரிவுகளை இந்த பணியிடம் பிரதிபலிக்கும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian mathematician donate 7 crore for california university

Next Story
UPSC Civil Services Exam 2019: ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு…UPSC Prelims
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com