Indian Navy Vacancy Details, Age Limit, Exam Pattern : மாலுமிகள் பணிகளுக்கு வேட்பாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. Joinindiannavy.gov.in என்ற அதன் இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் இந்த மாதம்( நவம்பர் ) 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில, முக்கிய விவரங்கள் இங்கே :-
ஊதியம் - மாதத்திற்கு ரூ. 14,600. ஆரம்பகால பயிற்சியை முடித்தவர்கள் ஊதிய நிலை 3க்கு மாற்றபடுவார்கள். பின் அவர்களின் சம்பளம் 21,700 - 69,100 என்ற அளவில் இருக்கும். இது தவிர, அவருக்கு மாதத்திற்கு 5,200 ரூபாய் எம்.எஸ்.பி மற்றும் டி.ஏ வழங்கப்படும்
கல்வித்தகுதி - மத்திய வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்கள் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்- ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் ஆரம்பம்- நவம்பர் 23, 2019
விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி- நவம்பர் 28, 2019
வயது எல்லை - அக்டோபர் 1, 2000 - செப்டம்பர் 30, 2003 என்ற இடைப்பட்ட நாட்களுக்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வுமுறை : கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி சோதனை, மெடிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் போன்றவைகளின் மூலம் ஒரு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
எழுத்துத் தேர்வு, 50 மல்டிபல் சாய்ஸ் கேள்விகள் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி என இருமொழியிலும் இருக்கும்.
இந்த 50 கேள்விகள் அறிவியல், கணிதம் / பொது அறிவு என இரண்டு பிரிவுகள் இருக்கும். கேள்விகளை தீர்க்க 30 நிமிட காலம் அனுமதிக்கப்படும்.
தேர்வு பாடத்திட்டம் : எழுத்துத் தேர்வில், வினாத்தாளின் தரம் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்- பொது மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ரூ .215 விண்ணப்ப கட்டணம் செலுத்தவேண்டும் . எஸ்சி மற்றும் எஸ்டி போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் என்று எதுவும் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.