Indian Navy Jobs Recruitment 2019: இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் மேட் பணியிடத்துக்கு, 554 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், மார்ச் 15-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
காலியிட விபரங்கள்:
மொத்த காலியிடம் - 554
கிழக்கு கடற்படை தலைமையகம், விசாகப்பட்டினம் - 46
மேற்கு கடற்படை தலைமையகம், மும்பை - 502
தெற்கு கடற்படை தலைமையகம், கொச்சி - 06
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்
7-வது ஊதிய குழுவின் அடிப்படையில், 18000 முதல் 56900/- வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க - மார்ச் 02, 2019
இறுதி நாள் - மார்ச் 15, 2019.
மேலும் தகவல்களுக்கு indiannavy.nic.in என்ற தளத்தை அணுகவும்.