scorecardresearch

இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 1535 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 1535 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 1535 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,535 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தபால் துறை வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Trade Apprentice – Attendant Operator (Chemical Plant)

காலியிடங்களின் எண்ணிக்கை – 396

கல்வி தகுதி: B.Sc. (Physics, Mathematics, Chemistry/ Industrial Chemistry) படித்திருக்க வேண்டும்.

Trade Apprentice (Fitter)

காலியிடங்களின் எண்ணிக்கை  – 161

கல்வி தகுதி: பிட்டர் பிரிவில் ஐ.டி.ஐ  படித்திருக்க வேண்டும்.

Trade Apprentice (Boiler)

காலியிடங்களின் எண்ணிக்கை  – 54

கல்வி தகுதி: B.Sc. (Physics, Mathematics, Chemistry/ Industrial Chemistry) படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice – Chemical

காலியிடங்களின் எண்ணிக்கை  – 332

கல்வி தகுதி: Diploma in Chemical Engg. / Refinery & Petro-Chemical Engg படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice – Mechanical

காலியிடங்களின் எண்ணிக்கை  – 163

கல்வி தகுதி: Diploma in Mechanical Engg படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice – Electrical

காலியிடங்களின் எண்ணிக்கை  – 198

கல்வி தகுதி: Diploma in Electrical Engg. படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice Instrumentation

காலியிடங்களின் எண்ணிக்கை  – 74

கல்வி தகுதி: Diploma in Instrumentation/ /Instrumentation & Electronics / Instrumentation & Control Engg படித்திருக்க வேண்டும்.

Trade Apprentice Secretarial Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை  – 39

கல்வி தகுதி: B.A./B.Sc/B.Com படித்திருக்க வேண்டும்.

Trade Apprentice Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை  – 45

கல்வி தகுதி: B.Com படித்திருக்க வேண்டும்.

Trade Apprentice Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை  – 41

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders)

காலியிடங்களின் எண்ணிக்கை  – 32

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினியில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 30.09.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி SC/ST/OBC(NCL)/PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://iocl.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/Apprenticeships/Files/a978f7954b4d4314aa0ac0cde4bae9e8.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Indian oil corporation recruitment 2022 for 1535 apprentices vacancies apply online