scorecardresearch

இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 265 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 265 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 265 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

IOCL Recruitment 2022: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 265 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Trade Apprentice-Accounts Executive/Graduate Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை – 190

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

Trade Apprentice Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை  – 18

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders)

காலியிடங்களின் எண்ணிக்கை  – 7

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினியில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentice- Retail Sales Associate

காலியிடங்களின் எண்ணிக்கை  – 40

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentice- – Retail Sales Associate (Skill Certificate Holders)

காலியிடங்களின் எண்ணிக்கை  – 10

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://www.iocl.com/apprenticeships என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு https://ioclsrmd.onlinereg.in/cyrusreg22/Images/Advertisement.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Indian oil corporation recruitment 2022 for 265 apprentices vacancies apply online