இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 473 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Trade Apprentice (Assistant Human Resource and Accountant)
கல்வி தகுதி: Bachelors degree (Graduation)/ Bachelors degree in Commerce படித்திருக்க வேண்டும்.
Technician Apprentice
கல்வி தகுதி: Mechanical Engineering , Automobile Engineering, Electrical Engineering , Electrical & Electronics Engineering, Electronics & Communication Engineering, Electronics & Telecommunication Engineering, Electronics & Radio Communication Engineering, Instrumentation & Control Engineering, Instrumentation & Process Control Engineering, Electronics Engineering பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
Data Entry Operator
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 12.01.2024 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி SC/ ST/ OBC(NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/Apprenticeships/Files/fc443547757e4e70a59c9a7ee22c5025.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“