Advertisment

ரயில்வே வேலை வாய்ப்பு; 1036 காலியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 1036 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Indian railways

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் அமைச்சுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 
காலியிடங்களின் எண்ணிக்கை: 1036

Advertisment

பதவிகளின் விபரம்

POST GRADUATE TEACHER, CHIEF LAW ASSISTANT, PUBLIC PROSECUTOR, PHYSICAL TRAINING INSTRUCTOR, TRAINED GRADUATE TEACHER, JUNIOR TRANSLATOR, STAFF AND WELFARE INSPECTOR, LIBRARIAN, PRIMARY RAILWAY TEACHER, LABORATORY ASSISTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: பதவி வாரியான கல்வித் தகுதியினை தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்வையிடவும். 

Advertisment
Advertisement

வயதுத் தகுதி: 01.01.2025 அன்று 18 வயது முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment