Advertisment

ரயில்வே வேலை வாய்ப்பு; 5696 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 5696 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினிரியங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
railway Train

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Assistant Loco Pilot (ALP)

காலியிடங்களின் எண்ணிக்கை : 5696

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.02.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-01-2024/Detailed_CEN_01_2024_English_final_1900_hrs.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs indian railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment