Advertisment

ரயில்வே வேலை வாய்ப்பு; 7951 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 7951 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினிரியங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Indian railways catering service irctc

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 7951 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 652 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Junior Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை : 7951

நிரப்பப்படும் பதவிகள்: 

Junior Engineer

Depot Material Superintendent 

Chemical & Metallurgical Assistant 

Chemical Supervisor / Research 

Metallurgical Supervisor / Research

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி : 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 35,400 – 44,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.08.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment