ரயில்வே வேலை வாய்ப்பு; 434 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிப்ளமோ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 434 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 434 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
southern-railway-

இந்திய ரயில்வேயில் துணை மருத்துவ (Paramedical) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 434 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Nursing Superintendent

காலியிடங்களின் எண்ணிக்கை: 272

கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery OR B.Sc Nursing படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 44,900 (அடிப்படை சம்பளம்)

Dialysis Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: B.Sc., plus Diploma in Haemodialysis படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 20 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)

Health & Malaria Inspector Gr II

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வித் தகுதி: B.Sc. having studied Chemistry as Main / Optional subject in any branch of Chemistry and One year Diploma of Health / Sanitary Inspector படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 105

கல்வித் தகுதி: Diploma in Pharmacy (OR) Bachelor degree in Pharmacy (B.Pharma) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 29,200 (அடிப்படை சம்பளம்)

Radiographer X-Ray Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Diploma in Radiography / X Ray Technician / Radio diagnosisTechnology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 19 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 29,200 (அடிப்படை சம்பளம்)

ECG Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Diploma/Degree in ECG Laboratory Technology / Cardiology/ Cardiology Technician / Cardiology Techniques படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 25,500 (அடிப்படை சம்பளம்)

Laboratory Assistant Grade

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technology (DMLT) (OR) Certificate Course in Medical Lab. Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 21,700 (அடிப்படை சம்பளம்)

வயது வரம்பு தளர்வு: ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.09.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Indian Railways Jobs Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: