தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இந்திய மசாலா வாரியத்தில் (SPICES BOARD) உள்ள தர மதிப்பீடு ஆய்வகத்தில் பயிற்சி பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் 10.02.2025 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
Trainee Analyst (Chemistry)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Bachelor of Science Degree with Chemistry as one of the subject or Bachelor degree in Chemistry படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் https://www.indianspices.com/opportunities.html என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: SPICES BOARD, WORLD TRADE AVENUE, NEAR SEAPOL LOGISITCS, VOC NEW PORT, TUTICORIN-628004, TAMIL NADU
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.