இந்திய அரசாங்கத்தில் இந்திய ஆட்சிப் பணி என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி பணி மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பற்றி பேசும்போது, டினா தாபி, ஸ்மிதா சபர்வால் மற்றும் அன்சார் ஷேக் போன்ற முக்கிய பெயர்கள் அடிக்கடி நினைவுக்கு வரும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கதை உள்ளது. அதே போல, பல ஆர்வமுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆர்வத்துடன் இவருடைய கதையும் பேசப்படுகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் வசிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியாவும் செய்தித் தலைப்புச் செய்திகள் மூலம் கவனத்தைப் பெற்று வருகிறார்.
தற்போது, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியா சத்தீஸ்கரில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் பணக்கார ஐ.ஏ/எஸ் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுவதால் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளார். ஆரம்பத்தில், அமித் கட்டாரியா வெறும் 1 ரூபாய் சம்பளம் வாங்கினார், இது நிதி ஆதாயத்தைவிட பொது சேவையில் அவரது கவனத்தை பிரதிபலிக்கிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியா, மத்திய அரசில் 7 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், அவர் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசுப் பணிக்குத் திரும்பினார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியா, 2015-ம் ஆண்டு சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அந்த பகுதிக்கு சென்றபோது, சன்கிளாஸ் அணிந்திருந்தது தலைப்புச் செய்தியாகி கவனத்தைப் பெற்றார்.
பிரதமர் வந்திருந்தபோது, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியா சன்கிளாஸ் அணிந்திருந்தது என்பது, அரசாங்க நெறிமுறையை மீறுவதாக உள்ளது என்று, அமித் கட்டாரியாவிடம் விளக்கம் கேட்டு மாநில அரசிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. அப்போது, சத்தீஸ்கர் முதல்வராக ராமன் சிங் இருந்தார். இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகத்தில், குறிப்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நலனை மேம்படுத்துவதில் கட்டாரியாவின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பணக்கார ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவராக கருதப்படும் ஏஎஸ் அதிகாரி அமித் கட்டாரியா, தற்போது சத்தீஸ்கரில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மட்டுமல்ல, நல்ல சிறப்பான கல்வி பின்னணி கொண்டவர். அமித் கட்டாரியா தனது பள்ளிப் படிப்பை ஆர்.கே. புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் முடித்தார், அங்கு அவர் கல்வியில் சிறந்து விளங்கினார். பின்னர், அவர் டெல்லி ஐ.ஐ.டி-யில் சேர்ந்து எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அமித் கட்டாரியா 2003-ம் ஆண்டில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் புமிக்க UPSC தேர்வில் 18வது ரேங்க் பெற்றார். இது அவரை இந்திய நிர்வாகப் பணியில் சேர வழிவகுத்தது. அவர் பெரும் செல்வச்செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தனிப்பட்ட நிதி ஆதாயத்தை விட தேசத்திற்கு சேவை செய்வதில் அதிக கவனம் செலுத்துவதற்காக தனது ஐ.ஏ.எஸ் பணிக்காக சில நேரங்களில் அடையாளத்துக்காக 1 ரூபாய் சம்பளத்தை மட்டுமே பெற்றுக்கொண்டார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியா ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் கொண்ட ஒரு முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர், குறிப்பாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவரது குடும்ப வணிகம் கணிசமான லாபத்தை ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. பல ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, அவரது குடும்பத்தின் செல்வச் செழிப்பான குடும்பமாக இருந்தபோதிலும், கட்டாரியா தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இந்திய நிர்வாக சேவையில் சேர்ந்தபோது மாதம் சம்பளம்மாக வெறும் 1 ரூபாய் மட்டுமே அடையாளத்துகாக வாங்கியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
இது பொது சேவையில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. சிவில் சர்வீசஸில் சேருவதில் தனது முதன்மையான குறிக்கோள் நாட்டுக்கு சேவை செய்வதே என்றும், இந்த பணிக்கான அர்ப்பணிப்புச் செயலாக சம்பளம் கொடுப்பதை அவர் கருதினார் என்றும் கூறினார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கட்டாரியா கமர்ஷியல் பைலட்டான அஸ்மிதா ஹண்டாவை திருமணம் செய்துகொண்டார். அமித் கட்டாரியாவின் மனைவி ஹண்டா விமானி என்பதால் அவருடைய சம்பளமும் ஒரு பெரும் தொகைதான். இந்த தம்பதியினர் குறிப்பாக அவர்களின் விடுமுறை நாட்களில், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் தருணங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி படங்களை வெளியிட்டு பகிந்துகொள்கின்றனர். அமித் கட்டாரியாவின் நிகர மதிப்பு சுமார் ரூ.8.90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.