Indian Oil Corporation Recruitment : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாக பணிகளுக்காக 129 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
நாட்டின் உள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) மிகவும் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் ஆண்டுந்தோறும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது 129 நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IOCL Released Official Notification for Non-Executive Posts: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் உண்டு.
கல்வித் தகுதி:
இந்த பணிக்கு தேவையான கல்வித் தகுதி குறித்த முழுவிபரங்கள் இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
https://www.iocl.com/download/Ad_for_Stage-II_Recruitment_FINAL_Haldia_revised.pdf
விரிவான விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான https://www.iocl.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 03. 7. 2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23. 7. 19
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 04.08.2019
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்: 09.08.2019
read more.. குரூப் 4 தேர்வு பணியிடங்கள், சம்பளம் முழு விவரம்
பணியிடங்கள் விவரங்கள்:
ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர் : 74 பணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் : 26 பணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) / ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் : 3 பணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர் (மெக்கானிக்கல்) / ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர்: 17 பணியிடங்கள்
ஜூனியர் பொறியியல் உதவியாளர் / இளைய தொழில்நுட்ப உதவியாளர் : பணியிடங்கள்
ஜூனியர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் : 3 பணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டெண்ட்: 04 பணியிடங்கள்
சம்பளம்: 11,900 - 32,000