இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்: 436 அப்ரண்டிஸ் பணியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?

IOCL Apprentice Job 2020: தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

By: Updated: November 26, 2020, 08:08:01 PM

IOCL apprentice recruitment 2020:  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத தொழிற்பழகுநர் பயிற்சிக்காக (அப்ரண்டிஸ்) விண்ணப்பங்களை வரவேற்க்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து விண்ணபிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் – 436

விண்ணப்ப செயல்முறை : நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2020  .

தகுதி பெற, 2021 ஜனவரி 3ம் தேதி நடத்தப்படும்  எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டும். நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு  ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படும். வர்த்தக பயிற்சி மற்றும் தரவு நுழைவு ஆபரேட்டர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 15 மாதகாலம் பயிற்சி அளிக்கப்படும்.

தகுதி

வயது வரம்பு : 18 – 24 ஆண்டுகள். நவம்பர் 30 ஆம் தேதி வரை வயது கணக்கிடப்படும்.

(குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

கல்வி: ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறுபடுகிறது. ஐடிஐ சான்றிதழோடு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது மூன்று ஆண்டு டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, 100 அப்ஜெக்டிவ் பல தேர்வு கேள்விகள் (MCQ கள்) கொண்டதாக இருக்கும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும்.

நேர்காணலுக்கு தகுதி பெற, மாணவர்கள் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

 

ஐ.ஓ.சி.எல் ஆட்சேர்ப்பு 2020: விண்ணப்பிப்பது எப்படி? 

ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான iocl.com க்கு செல்லவேண்டும்

ஸ்டேப் 2: ‘கேரியர்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டேப் 3: தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்

ஸ்டேப் 4: பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும்

ஸ்டேப் 5: ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Iocl recruitment 2020 check vacancy eligibility how to apply iocl com

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X